இலங்கை: இந்திய வெளியுறவு கொள்கையில் மாற்றம் தேவை-ராமதாஸ்
சென்னை: இலங்கையுடனான இந்திய வெளியுறவு கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை கருணாநிதி வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாமகவும் இலங்கை தமிழர் பிரச்சினையும் என்ற தலைப்பில் சென்னை தியாகராய நகரில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:
இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க ராஜீவ் காந்தி முயற்சித்தார். ஆனால் அவருக்கு சரியான ஆலோசனை சொல்லப்படவில்லை. இதனால் அவரை இழந்தோம்.
இந்தியாவில் மற்ற மாநிலத்தினர் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவர்கள் வெகுண்டு எழுந்து விடுவார்கள். ஆனால் ஒரு இனமே இலங்கையில் பாதிக்கப்படும் போது நாம் தூங்கிக்கொண்டு இருக்கிறோம்.
ஈழத் தமிழனுக்கும், நமக்கும் இருப்பது தொப்புள்கொடி உறவு. அதனால் நாம் இந்த பிரச்சினையில் சும்மா இருக்க முடியாது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அதை அதிமுக, மதிமுக, பாஜக போன்ற கட்சிகள் புறக்கணித்து உள்ளார்கள். அவர்களும் கூட்டத்திற்கு சென்றிருக்க வேண்டும். அங்கு போய் குறைகளைக் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்ட முடிவை பாமக ஆதரிக்கிறது. இனியாவது ஒன்றாக குரல் கொடுப்போம். இலங்கை பிரச்சினை தொடர்பாக முதல்வர் கருணாநிதி இன்னும் ஒரு மாதத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து இலங்கையில் என்ன அரசியல் தீர்வு எடுக்கப்பட்டது என கேட்க வேண்டும்.
இலங்கையுடனான இந்திய வெளியுறவு கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை கருணாநிதி வலியுறுத்த வேண்டும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications