ரயில்பெட்டி தொழிற்சாலை: நிலத்தை திரும்ப கொடுத்தார் மாயாவதி
Subscribe to Oneindia Tamil
லக்னோ: ரேபரேலியில் ரயில் பெட்டி தொழிற்சாலை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை திரும்ப பெற்ற உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி அந்த நிலத்தை மீண்டும் ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார்.
லக்னோவில் நேற்று நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னர் மாயாவதி இதை அதிகாரபூர்வமாக அறிவித்தார். அவர் கூறியதாவது
ரயில்வே அமைச்சகத்துக்கு 90 ஆண்டுகால குத்தகை அடிப்படையில் 189.25 ஹெக்டேர் ஏக்கர் நிலம் மீண்டும் ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். 189.25 ஹெக்டேர் ஏக்கர் நிலம் புறம்போக்கு நில ஒதுக்கீட்டை மட்டுமே மாநில அரசு ரத்து செய்தது.
ஆனால் அந்த சிறிய நிலத்தை காரணம் காட்டி பூமி பூஜை நிகழ்ச்சியை சோனியா வேண்டுமென்றே நிறுத்திவிட்டார். தேர்தல் ஆதாயம் கருதி சோனியா அரசியல் நாடகத்தை நடத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications