அக்கராயன்குளத்தைப் பிடித்துவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவிப்பு
கொழும்பு: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரமான அக்கராயன்குளத்தைப் பிடித்துவிட்டதாக இலங்கை ராணுவ அமைச்சகம் சற்று நேரத்துக்கு முன் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்திலுள்ள கிளிநொச்சியைப் பிடிக்க சிங்கள ராணுவம் கடும் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
தற்போது புலிகளின் முக்கிய நிலைகளை வான் வழியாகவும் தரை மார்க்கமாகவும் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர் ராணுவத்தினர்.
புலிகளின் ஆதிக்கத்திலுள்ள அக்கராயன் குளம் பகுதியில் கடும் சண்டை நடந்து வந்தது. இந்தப் பகுதியை இன்று பிற்பகல் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த சண்டையில் உயிர் சேத விவரம் எதையும் ராணுவம் தெரிவிக்கவில்லை.
புலிகள் அமைதி!
ஆனால் இதுகுறித்து புலிகள் தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. புலிகள் தரப்பு சேதம் குறித்தும் எதுவும் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications