இலங்கைத் தமிழர் நிவாரண நிதி: தயாளு அம்மாள் ரூ.5 லட்சம்!

இதன் மூலம் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் இலங்கைத் தமிழர்களின் துயர்துடைக்க தமிழக மக்கள் அளித்து வரும் நிதி ரூ.4 கோடியை எட்டியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டபடி, இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் தொடர்ந்து நிவாரண நிதி அளிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 30-ந் தேதி வரை 3 கோடியே 25 லட்சத்து 30 ஆயிரத்து 537 ரூபாய் நிதி அளிக்கப்பட்டு இருந்தது. நேற்றும் பலர் நிதி அளித்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் துணை வேந்தர் மன்னர் ஜவஹர், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு மற்றும் சங்கத்தினர் சார்பில் பெப்சி விஜயன், வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் சார்பில் வேந்தர் ஜி.விஸ்வநாதன் மற்றும் ஜி.வி.செல்வம், பன்னாரி அம்மன் சுகர்ஸ் சார்பில் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கினர்.
தயாளு அம்மாள்
முதல்வரின் மனைவி தயாளு அம்மாள் ரூ.5 லட்சம் வழங்கினார். ஈகிள் பதிப்பகம் சார்பில் பிரதாப் சிங் தலா ரூ.5 லட்சம் வழங்கினார். முதல்வர் மகன் முக தமிழரசு, பேரன் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் தொலைக்காட்சி சரத்குமார் உள்ளிட்ட பலர் தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கினர்.
எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் ஆர்.எம்.வீரப்பன், தனிப்பட்ட முறையில் ஆர்.எம்.வீரப்பன் தலா ரூ.50 ஆயிரம், தமிழச்சி தங்கபாண்டியன் தலா ரூ.25 ஆயிரம் வழங்கினர்.
கடந்த சில நாட்களாக அளிக்கப்பட்ட நிதியையும் சேர்த்து நேற்று வரை தரப்பட்ட நிதி 3 கோடியே 88 லட்சத்து 52 ஆயிரத்து 738 ரூபாயை எட்டியுள்ளது, என அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications