காஞ்சிபுரத்தில் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்!
சென்னை: பாலாறு மற்றும் குசஸ்தலை ஆறுகளில் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தி அதிமுக இன்று காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா இதுகுறித்து நேற்று வெளியிட்ட அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாறு, குசஸ்தலை ஆறுகளில் விதிமுறைகளை மீறி திமுகவினர் மணல் எடுப்பதால், பெரும்பாக்கம், மேல் கதிர்பூர் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட மணல், லாரிகள் மூலம் செவிலிமேடு, வந்தவாசி, ஓரிக்கை, வாலாஜாபாத், தென்னேரி, சுங்குவார்சத்திரம் ஆகிய சாலைகள், வேலஞ்சேரி, தாழவேரி, பூணிமாங்காடு, அருங்குளம், நெமிலி ஆகிய சாலைகள் வழியாக தினமும் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால், இந்த சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாகி, இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், பள்ளிப்பட்டு, திருத்தணி ஆகிய பகுதிகளில் அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக, மாணவ, மாணவியர், விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகி உள்ளது.
அண்ணா நூற்றாண்டு விழாவையட்டி, காஞ்சிபுரம் காமராஜர் நகரில் அமைக்கப்பட்ட அதிமுக கல்வெட்டை காவல்துறை உதவியுடன் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர். இதைத் தட்டிக் கேட்ட காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அச்சுறுத்தப்பட்டதோடு, 4 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இப்படி பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் திமுக அரசைக் கண்டிக்கிறேன்.
மணல் கொள்ளை, சாலைகளைச் சீரமைக்காதது, மின்வெட்டு, கல்வெட்டை இடித்தது, பொய் வழக்கு போட்டது ஆகியவற்றைக் கண்டித்து, அதிமுக சார்பில் 4-ம் தேதி (இன்று, புதன் கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில், அமைப்புச் செயலாளர் செம்மலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications