வேலூர்-குமரி-திருவள்ளூர்: புதிய கலெக்டர்கள்
சென்னை: கன்னியாகுமரி, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி வெளியிட்டுள்ள உத்தரவில்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரகுமார், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் கமிஷனர் ஜி.சுந்தரமூர்த்தி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.
காஞ்சீபுரம் மாவட்ட சப்-கலெக்டர் (செங்கல்பட்டு) சி.ராஜேந்திரன், வேலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.
முன்னதாக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக ஆஷிஷ் சட்டர்ஜியை நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவர் சென்னை மாநகராட்சி இணை கமிஷனர் (பணிகள்) பதவியில் தொடர்வார்.
அதேபோல சிவகங்கை மாவட்ட கலெக்டராக பூஜா குல்கர்னியை நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது. அவர் ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் (மேம்பாடு) மற்றும் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமையின் திட்ட அதிகாரி பதவியிலேயே தொடர்வார்.
வேலூர் மாவட்ட கலெக்டராக பங்கஜ் குமாரை நியமித்து வெளியிடப்பட்ட உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது. அவர் சிவகங்கை மாவட்ட கலெக்டர் பதவியிலேயே தொடர்வார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications