கேரளாவுக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தல்
செங்கோட்டை: கேரளாவுக்கு கடத்தப்பட்ட 30 மூடை ரேஷன் அரிசி மற்றும் அதைக் கடத்த பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக கேரள எல்லையான செங்கோட்டை வட்டார பகுதிகளிலிருந்து பஸ், ஆட்டோ போன்ற வாகனங்களில் கேரள மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் சிறப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சுடலையாண்டி, போலீசார் ஜோஸ்குமார், அணில் குமார், முத்துமுருகன், சரவணகுமார் பார்த்தசாரதி, ஆகியோர் மாறுவேடத்தில் புளியரை, பண்பொழி, மேக்கரை, உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது செங்கோட்டையிலிருந்து மேக்கரை நோக்கி வந்த ஒரு பயணிகள் ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த ஆட்டோவில் 3 மூடை ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது.
ஆட்டோ டிரைவர் ஜலால் என்ற பஞ்சர்பாய், ஆட்டோவில் இருந்த சைத்தான் சாகுல், நவுசாத் ஆகியோரிடம் ஆகியோரிடம் விசாரித்ததில் ரேசன் அரிசியை வாங்கி மொத்தமாக கேரளாவுக்கு கடத்துவதும் மேக்கரை அருகே ஒரு குடோனில் 27 மூடை ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 27 மூடை ரேசன் அரிசியையும் பறி்முதல் செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications