நஷ்ட ஈடு வழங்காததால் 3 அரசு பஸ்கள் ஜப்தி

Subscribe to Oneindia Tamil

தென்காசி: விபத்துக்களில் படுகாயமடைந்த 3 பேருக்கு இழப்பீடு வழங்காததால், 3 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.

நெல்லை மாவட்டம் கீழவிராணத்தை சேர்ந்தவர் சேக் மீரான். இவரது மனைவி மகுதம்மாள். இவர் அரசு பஸ்சில் பயணம் செய்த போது டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததால் தடுமாறி விழுந்த மகுதம்மாள் படுகாயமடைந்தார்.

இதேபோல, தென்காசி முன்சீப் நிதிபதியாக பணியாற்றிய சீனிவாசன் கடந்த 24-12-04 இவர் நெல்லைக்கு அரசு பஸ்சில் சென்றபோது அருணாபேரி விலக்கு அருகே லாரியில் மோதி விபத்திக்குள்ளானதில் படுகாயமடைந்தார்.

அதேபோல, சங்கரன்கோவில் குத்தாலப்பேரியை சேர்ந்த பிரபாகரன். இவர் வல்லராமபுரம் அருகே அரசு பஸ்சில் சென்றபோது பஸ் சுவரில் மோதி விபத்துகுள்ளானதில் படுகாயமடைந்தார்.

இந்த வெவ்வெறு விபத்துகளில் படுகாயமடைந்த மூவரும் வாகன விபத்து நஷ்ட ஈடு கோரி தென்காசி முதன்மை சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

நீதிபதி வழக்கை விசாரணை செய்து மகுதம்மாளுக்கு 9 ஆயிரத்து 500 ரூபாயும், சீனிவாசனுக்கு 92 ஆயிரத்து 510 ரூபாயும், பிரபாகரனுக்கு 1 லட்சத்து 54 ஆயிரத்து 500 ரூபாயும் அரசு போக்குவரத்து கழகம் வழங்க உத்தரவிட்டார்.

ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடு வழங்கவி்ல்லை. இதனையடுத்து மூவரும் பஸ்சை ஜப்தி செய்ய கோரி மனு தாக்கல் செய்தனர்.

நீதிபதி சரவண பெருமாள் மனுக்களை விசாரித்து ஒவ்வொரு வழக்கிலும் தலா ஒரு அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவி்ட்டார். அதன் படி தென்காசி பஸ் ஸ்டாண்டில் நின்ற 3 பஸ்களை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+