சட்ட கல்லூரிகள் காலவரையின்றி மூடல்-தேர்வுகள் ரத்து!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்த கொடூர வன்முறையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சட்டக் கல்லூரிகள் அனைத்திலும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று நடைபெறுவதாக இருந்த சட்டக் கல்லூரித் தேர்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டன. மேலும் தொடர்ந்து வன்முறை பரவாமல் இருக்க சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் நெல்லை சட்டக் கல்லூரிகள் கால வரையின்றி மூடப்பட்டன.
சட்டக் கல்லூரி பருவத் தேர்வுகள் இப்போது நடந்து கொண்டுள்ளன. நிலைமையின் தீவிரம் கருதி அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று தேர்வெழுத வந்த அனைத்து மாணவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.












Click it and Unblock the Notifications