நிதீஷ் 'பிளமன்ட்' இல்லாத பல்பு- லாலு பிரசாத் பதிலடி
பாட்னா: ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவை பியூஸ் போன பல்பு என கூறும் பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார், ஒரு பிளமன்ட் இல்லாத பல்பு என ராஷ்டிரிய ஜனதாதளம் பதிலடி கொடுத்துள்ளது.
லாலு பிரசாத் யாதவ் ஒரு பியூஸ் போன பல்பு என நிதீஷ் குமார் விமர்சித்திருந்தார். இதற்கு ராஷ்டிரிய ஜனதாதள செய்தித் தொடர்பாளர் மற்றும் தேசிய பொதுச் செயலாளரான ஷியாம் ரஜக் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், லாலு பிரசாத் யாதவை விமர்சிக்கும் நிதீஷ் குமார் ஒரு பிளமன்ட் இல்லாத பல்பு.
நிதீஷ்குமாரும், ஐக்கிய ஜனதாதள எம்.பி. சிவானந்த திவாரியும், தேவையில்லாமல் பேசி வருகின்றனர். லாலு பிரசாத்தை தேவையில்லாமல் தாக்குகின்றனர்.
இதை விட்டு விட்டு மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இருவரும் கவனம் செலுத்த வேண்டும். ஆர்.ஜே.டியை தாக்குவதை விட்டு விட்டு மக்கள் குறித்து கவலைப்பட வேண்டும்.
நிலைமை தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார் நிதீஷ்குமார்.
திவாரிக்கு மன நலம் சரியில்லை. அதனால்தான் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார். முன்பு அவர் ஆர்.ஜே.டியில் இருந்தபோது நிதீஷ்குமாரை முதுகெலும்பில்லாதவர் என்று விமர்சித்ததை யாரும் மறக்கவில்லை என்றார் ரஜக்.












Click it and Unblock the Notifications