புலிகள் தொடர்பு: வைகோவுக்கு பிரிட்டன் விசா மறுப்பு!

பிரிட்டன் தலைநகர் லண்டனில், தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் 26-ந் தேதி கூட்டம் ஒன்று நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்காக லண்டன் செல்ல அனுமதிக்கக்கோரி பொடா கோர்ட்டில் வைகோ மனு செய்திருந்தார்.
கோர்ட்டும் அவரது கோரிக்கையை ஏற்று லண்டன் செல்ல அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து வைகோ, சென்னையில் இருந்து லண்டன் செல்ல 24-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) விமான டிக்கெட்டும் எடுத்துவிட்டார்.
லண்டன் செல்ல விசா கேட்டு வைகோ, இங்கிலாந்து தூதரகத்தில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால், இங்கிலாந்து தூதரகம் வைகோவுக்கு விசா வழங்க மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து, வைகோ தனது லண்டன் பயணத்தை ரத்து செய்து விட்டார்.
வைகோவுக்கு விசா வழங்க அனுமதி மறுத்தது குறித்து, சென்னையில் உள்ள இலங்கிலாந்து தூதரக அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசி வருவதால், அவருக்கு விசா வழங்க இலங்கிலாந்து தூதரகம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே புலிகள் அமைப்புக்கு பிரிட்டனில் தடை விதிக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications