சென்செக்ஸ் இன்றும் இறங்கு முகம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் இன்றும் இறங்குமுகமாகவே இருந்தது. வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களில் சடசடவென 200 புள்ளிகளுக்கும் மேல் உயர்வைச் சந்தித்த சென்செக்ஸ், சிறிது நேரத்துக்குள் 9160 புள்ளிகளில் நின்றது.
ஆனால் இந்த நிலை வெகுநேரம் நீடிக்கவில்லை. வர்த்தக முடிவில் 207 புள்ளிகள் குறைந்து 8,696ல் நிலைபெற்றது. நிப்டியிலும் 54 புள்ளிகள் குறைந்தன. 2654 புள்ளிகளில் முடிந்தது நிப்டி குறியீட்டெண்.
இன்றைய வர்த்தகத்தில் டிஎல்எப், ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஸ்டெர்லைட் மற்றும் ஐசிஐசிஐ போன்றவை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.
ஆசியாவின் இதர சந்தைகள் அனைத்திலுமே இன்று பங்கு வர்த்தகம் ஏறுமுகமாகவே இருந்தது. இந்திய பங்குச் சந்தையில் மட்டுமே இவ்வளவு சரிவு.












Click it and Unblock the Notifications