திருச்சியில் குவியல் குவியலாக நாய்கள் பிணம்!
திருச்சி: திருச்சி அருகே அழுகிய நிலையில் குவியல் குவியலாக நாய்கள் பிணங்கள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி கே.கே.நகர் அருகே உள்ளது தேவராய நகர். இந்தப் பகுதியில் இருந்து கிராப்பட்டிக்கு செல்லும் பாதையில் ராணுவத்திற்கு சொந்தமான இடத்தில் கடந்த இரு நாட்களாக கடும் துர்நாற்றம் வீசியது.
அப்பகுதி மக்கள் முட்புதர் பக்கம் சென்று பார்த்த போது அங்கு அழுகிய நிலையில் சுமார் 40 நாய்களின் பிணங்கள் குவியலாகக் கிடந்தன.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் பிணங்களை தீ வைத்து எரித்தனர்.
இவற்றைக் கொன்று இங்கே வந்து கொட்டியது யார் என்று தெரியவில்லை. விசாரணை நடக்கிறது.
பெங்களூரில் வெடி வைத்து கொல்லப்பட்ட நாய்:
பெங்களூரில் ஒரு நாய் வெடி மருந்து வெடித்து இறந்தது. நாய்க்கு வெடி வைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூர் ஹெக்கனஹள்ளி சஞ்சீவினி நகர் பகுதியி்ல் திடீரென வெடிப்பொருள் வெடித்து ஒரு நாய் சிதறியது.
அந்த பகுதியில் சிலர் வளர்த்து வந்த கோழிகளை நாய் தின்று வந்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைத்த அவர்கள் நாய்க்கு உணவில் வெடிப்பொருள் கலந்து வெடிக்க செய்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அந்த பகுதியில் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தியபோது லட்சுமம்மா என்பவரின் வீட்டில் வெடி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.












Click it and Unblock the Notifications