தீவிரவாதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை?
மும்பை: மும்பையில் 2 முக்கிய ஹோட்டல்களில் அமெரிக்கர்கள், இங்கிலாந்து நாட்டினர், இஸ்ரேலியர்கள், பிரேசில் நாட்டவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் தீவிரவாதிகளிடம் பிணயக் கைதிகளாக உள்ள நிலையில் தீவிரவாதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையைத் துவக்கியுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.
டிரைடண்ட் ஹோட்டல், நரிமன் ஹவுஸ் ஆகிய ஹோட்டல்களில் இவர்களை தீவிரவாதிகள் பிணயக் கைதிகளாக வைத்துள்ளனர்.
தீவிரவாதிகளைத் தாக்க கமாண்டோக்கள் தயார் நிலையில் இந்த ஹோட்டல்களை சுற்றி வளைத்திருந்தாலும் முழு அளவில் தாக்குதல் நடத்தவில்லை. இதனால் தீவிரவாதிகளுடன் ஏதாவது பேச்சுவார்த்தை நடக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இந் நிலையில் வெளிநாட்டினரின் உயிரைக் காக்க தீவிரவாதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தைகளைத் துவக்கியுள்ளதாக ஒரு வெளிநாட்டுத் தூதர் கூறியதாக செய்திகள் வருகின்றன.
இதற்கிடையே டிரைடண்ட் ஹோட்டலில் சில நிமிடங்களுக்கு முன் பயங்கர குண்டு சத்தம் கேட்டது. தொடர்ந்து துப்பாக்கி சண்டை சத்தமும் கேட்கிறது.
இதற்கிடையே மூத்த அமைச்சர்களுடன் டெல்லியில் பிரதமரும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால், பேச்சுவார்த்தை ஏதும் நடக்கவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனாலும் பேச்சு நடப்பதாகவே தெரிகிறது.
சிறைகளில் உள்ள தீவிரவாதிகளை விடுவிக்க கோரிக்கை:
பிணயக் கைதிகளை விடுவிக்க வேண்டுமானால் இந்திய சிறைகளில் உள்ள தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என தீவிரவாதிகள் கோரி வருவதாகத் தெரிகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications