சென்னை மழை பாதித்த பகுதிகளில் கருணாநிதி ஆய்வு
சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் கருணாநகிதி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர் மழையால் சென்னை நகரம் தத்தளித்து வருகிறது. புறநகர்ப் பகுதிகள்கிட்டத்தட்ட நீரில் மிதக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. பல பகுதிகளில் மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு போய் விட்டனர்.
இந்த நிலையில், முதல்வர் கருணாநிதி இன்று கோட்டூர்புரம், காந்தி மண்டபம், சைதாப்பேட்டை, கீழ்ப்பாக்கம், பெரம்பூர் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று மழை, வெள்ள நிலைமையை நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விரைவில் மத்திய நிபுணர் குழு வருகை தரும் என எதிர்பார்க்கிறோம். வெள்ள நிவாரணப் பணிகளுக்குத் தேவையான நிதியுதவியை மத்திய அரசு அளிக்கும் என நம்புகிறோம்.
நிஷா புயலால் ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை மத்திய அரசுக்கு ஏற்கனவே வழங்கி விடடோம்.
நானே அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, சேத பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நடவடிக்கைளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டேன் என்றார்.
முதல்வருடன் உணவுத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, சென்னை மேயர் சுப்ரமணியம், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி மற்றும் காவல்துறை அதிகாரிகளும் உடன் சென்றனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications