பிரான்சிலிருந்து தனி விமானம்: இஸ்ரேலிலிருந்து நிபுணர்கள்

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஓபராய் ஹோட்டலில் மட்டும் மொத்தம் 32 பேர் உயிரிழந்ததாக ஓபராய் ஹோட்டல் குழு தலைவர் பி.ஆர்.எஸ். ஓபராய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஓபராய் பேசுகையில், ஹோட்டல் டிரைடன்ட்- ஓபராயில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் ஹோட்டலில் தங்கியிருந்த 4 பேர், 18 விசிட்டர்கள், 10 ஊழியர்கள் என மொத்தம் 32 பேர் உயிரிழந்தனர்.

நான்கு விருந்தினர்களில் 3 பேர் வெளிநாட்டினர். இவர்கள் தவிர 3 விருந்தினர்கள், 4 விசிட்டர்கள், 2 ஊழியர்கள் காயமடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓபராய் ஹோட்டலிலிருந்து 135 பேரும், டிரைடன்ட் ஹோட்டலிலிருந்து 316 பேரும் மீட்டு வெளியேற்றப்பட்டனர்.

ஹோட்டலின் எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்புத்துறை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் காவல் நிலையங்கள் உள்ளிட்டவற்றை கண்காணிக்க அரசு ரகசிய கேமராக்களைப் பொருத்த முன்வர வேண்டும்.

ஓபராய், டிரைடன்ட் ஹோட்டல்களில், ஓபராய்தான் மிக அதிக அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது என்றார் ஓபராய்.

பிரான்சிலிருந்து வந்த தனி விமானம்:

இதற்கிடையே தாஜ், ஓபராய் ஹோட்டல்களில் தங்கியிருந்து தீவிரவாதிகள் பிடியில் சி்க்கித் தப்பிய தனது நாட்டைச் சேர்ந்த 26 பேரை அழைத்துச் செல்ல பிரான்ஸ் தனி விமானத்தை அனுப்பி அவர்களை அழைத்துச் சென்றுள்ளது.

இஸ்ரேலிய நிபுணர்கள்-நிருபர்கள்:

இதற்கிடையே நரிமன் ஹவுசில் யூதர்களைக் குறி வைத்து நடந்ததால் இஸ்ரேலில் இருந்து 5 பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் ஏராளமான நிருபர்களும் மும்பையில் குவிந்துள்ளனர்.

இந்த நிபுணர்களின் உதவியை இந்தியா பயன்படுத்தவில்லை என்றாலும் அவர்கள் தங்களது மக்களைக் காக்க ஓடோடி வந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+