பாதுகாப்பு செயலாளர் நாராயணனனும் ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

MK Narayanan
டெல்லி: இந்தியா இதுவரை பார்த்ததிலேயே மிக மட்டமான தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணனும் தனது பதவியை ராஜினாமா செய்ய முன் வந்துள்ளார்.

ஆனால், வேறு ஆலோசகரை தேர்வு செய்யும் வரை இவரது ராஜினாமா கிடப்பில் போடப்படும் என்று தெரிகிறது.

வெளியுறவுச் செயலாளராக இருந்து பிரதமர் ராஜிவ் காந்தி உள்பட பல பிரதமர்களை இலங்கை, காஷ்மீர், அமெரிக்க உறவு உள்ளிட்ட பல விஷயங்களில் தவறாக வழி நடத்திய ஜே.என்.தீட்சித் இம்முறை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

வழக்கம் போலவே பிரதமர் மன்மோகன் சிங்கையும் தவறாகவே வழி நடத்தி வந்தார். திடீரென அவர் மறையவே 2005ம் ஆண்டு இந்தப் பொறுப்பு எம்.கே.நாராயணனிடம் வழங்கப்பட்டது. இது நிலைமையை இன்னும் மோசாக்கியது.

இந்திரா காந்தி குடும்பம், காங்கிரஸ் கட்சி ஆகியோரின் ஜால்ரா என்பதைத் தவிர நாராயணனுக்கு பெரிய தகுதி ஏதும் இருந்ததில்லை.

இந்திரா குடும்பத்துக்கு நெருக்கம் என்பதால் இருமுறை இன்டெலிஜென்ஸ் பீரோவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1992ம் ஆண்டில் இவர் ஓய்வு பெற்றார். 2004ம் ஆண்டில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கி்ன் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். தீட்சித் மறைந்த பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரானார்.

பாலக்காட்டைச் சேர்ந்தவரான இவர் தான் தேசிய பாதுகாப்பு விஷயத்தில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கு உதவி வந்தவர். இருவரும் சேர்ந்து காட்டிய பொறுப்பின்மையும் செயலின்மையும் தான் நாட்டை இந்த அளவுக்குக் கொண்டு வந்து விட்டுள்ளது.

மீண்டும் வருவாரா பிரிஜேஷ் மிஸ்ரா?:

நாராயணன் மீது சமீப காலமாவே பிரதமர் நம்பிக்கை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் பாஜக ஆட்சியில் பிரதமர் வாஜ்பாயின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ராவுடன் பிரதமர் மன்மோகன் சிங் அவ்வப்போது ஆலோசனைகள் நடத்தி வந்தார்.

அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்த விஷயத்தில் இவர் பிரதமருக்கு பெரும் உதவியாக இருந்தார்.

மேலும் பாஜக ஆட்சியில் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் மிகுந்த தீவிரம் காட்டியவர். யாருக்கும் அஞ்சாதவர், வாஜ்பாயோ-அத்வானியோ.. யாருக்கும் ஜால்ரா போட மாட்டார். மனதில் பட்டதை சொல்லிவிடுவார். இதனால் இவர் மீது வாஜ்பாய்க்கு அதீத மரியாதை உண்டு.

குறிப்பாக ஐபி மற்றும் ரா அதிகாரிகளை தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் மிஸ்ரா.

நேற்று கூட நாராயணனுடன் மிஸ்ராவையும் உடன் வைத்துக் கொண்டு தான் முக்கிய ஆலோசனையை நடத்தினார் மன்மோகன் சிங்.

இதற்கிடையே நாராயணனுக்குப் பதிலாக வேறு ஆலோசகரை தேர்வு செய்யும் வரை அவரையே பதவியில் நீடிக்குமாறு பிரதமர் கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

மிஸ்ராவையே மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக்க வேண்டும் என்று கூட கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஐபி தலைவரும் பதவி இழக்கிறார்?:

அதே போல இன்டலிஜென்ஸ் பீரோ உளவுப் பிரிவின் இயக்குனர் பி.சி. ஹல்தர், உள்துறைச் செயலாளர் மதுக்கர் குப்தா ஆகியோரும் ராஜினாமா செய்யுமாறு பிரதமரால் உத்தரவிடப்படுவார்கள் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+