'இதெல்லாம் சகஜம்'-துணை முதல்வர் உளறல்
மும்பை: மும்பையி்ல் ஊடுறுவிய தீவிரவாதிகள் 5000 பேரைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாக மகாராஷ்டிர துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கிட்டத்தட்ட 5000 பேரை கொன்று குவிக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். அந்த அளவுக்கு வெடிபொருட்களை அவர்கள் பதுக்கி வைத்திருந்தனர்.
பிடிபட்ட தீவிரவாதி கஸரிடமிருந்து பெருமளவிலான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவன் ஒருவனிடமே இந்த அளவுக்கு இருந்தால் மற்றவர்களிடம் உள்ள வெடிபொருட்களையும் சேர்த்தால் எந்த அளவுக்கு அவர்கள் மிகப் பெரிய நாச வேலைக்கு திட்டமிட்டிருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
பெரிய பெரிய நகர்களில் இதுபோன்ற சின்ன தாக்குதல்கள் (!!) நடப்பது சஜகம தான். நமது படையினரின் செயல்பட்டால் இதில் சில நூறு பேர் தான் பலியாகியுள்ளனர் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
தீவிரவாதிகளிடம் ஏராளமான கையெறி குண்டுகள், வெடிகுண்டுகள், நூற்றுக்கணக்கான துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்தன.
தாஜ் ஹோட்டல் அருகே 2 பெட்டிகளில் தலா எட்டு கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அதை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் யாரும் மும்பையில் தங்கியிருந்தவர்கள் அல்ல. அன்றைய தினம்தான் அவர்கள் மும்பைக்கு வந்தனர்.
அவர்களிடம் ஹோட்டல்களின் வரைபடங்கள் இருந்தன. ஆனால் எப்படித் தாக்க வேண்டும் என்ற உத்தரவுகள் அனைத்துமே அண்டை நாட்டிலிருந்துதான் வந்தன.
உள்ளூர்க்காரர்களுக்கு இந்தத் தாக்குதலுக்குத் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்றார் அவர்.
இதற்கிடையே மகாராஷ்டிர உள்துறை, போலீஸ்துறையை கையில் வைத்திருக்கும் ஆர்.ஆர்.பாட்டீலின் இந்த உளறலுக்கு நாடு முழுவதும் கடும் எதி்ர்ப்புக் கிளம்பியுள்ளது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஆனால், பதவி அவர் பதவி விலக மாட்டேன் என்று கூறிவிட்டார்.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications