மதுரையில் மூன்று ரவுடிகள் வெட்டிக் கொலை!
மதுரை: மதுரையில் முன் விரோதம் காரணமாக மூன்று ரவுடிகள் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் முனூஸ். இவர் கடந்த 2003ம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மாரிமுத்து என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பின்னர் அவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
இந் நிலையில் மாரிமுத்து, தனது அண்ணன் மூர்த்தி (37), ரமேஷ் (27) ஆகியோருடன் ஹவுசிங் போர்டு காலனி அடுத்துள்ள புதர் பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் மாரிமுத்து உள்பட மூன்று பேர் மீதும் பயங்கர ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் தப்பியோட முயன்ற மாரிமுத்து, ரமேஷ் ஆகியோரை உடலின் பல இடங்களில் வெட்டி கொலை செய்தனர்.
படுகாயமடைந்த மூர்த்தி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இறந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதால் பழிக்கு பழி வாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க காவல் துறையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கொலையான மூவர் மீதும் பல வழக்குகள் உள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications