கோவை விமான நிலையம், டெல்லி கோர்ட்டில் வெடிகுண்டு பீதி
கோவை: கோவை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என எழுதப்பட்டிருந்த வாசகத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பீளமேட்டில் உள்ள விமான நிலைய வளாகத்தில் உள்ள ஒரு டிராலியில் சாக்பீஸால், குண்டுவெடிக்கும் என தமிழில் எழுதப்பட்டிருந்தது.
இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் சகிதம் விரைந்து வந்தனர்.
விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அது வதந்தி எனத் தெரிய வந்தது.
இந்த பரபரப்பால் விமானப் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
டெல்லி கோர்ட்டில் பரபரப்பு:
இதேபோல டெல்லி, தீஸ் ஹஸாரி கோர்ட் வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த அனாமதேய போன் அழைப்பால் பீதி ஏற்பட்டது.
இன்று காலை 9.15 மணிக்கு டெல்லி போலீஸாருக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பு, தீஸ் ஹஸாரி கோர்ட் வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தது.
இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
கோர்ட்டில் இருந்த அனைவரும் அங்கிருந்து அகற்றப்பட்டு சோதனை நடந்தது. ஆனால் அந்தத் தகவல் புரளி என பின்னர் தெரிய வந்தது.
-
பொள்ளாச்சியில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. கனிம வளத்துறை அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications