பாபர் மசூதி இடிப்பு தினம் - தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு
சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே 9 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், பஸ் நிலையங்கள், கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், முக்கிய பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாகனத் தணிக்கையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னை நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டு பின்னர் உள்ளே அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நட்சத்திர ஹோட்டல்கள், வணிக வளாக மால்கள், திரையரங்குகளும் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
மதுரையில் ...
தமிழகத்தின் தென் மாவட்டங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயுதம் தாங்கி பாதுகாப்புப் படையினர் 24 மணி நேர பாதுகாப்பில் உள்ளனர். அதேபோல பழனி தண்டாயுதபாணி கோவில், நெல்லையப்பர் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ளிட்ட அனைத்து முக்கிய கோவில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல ரயில் நிலையங்கள், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களின் விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மோப்ப நாய்கள், வெடிகுண்டுகளை அகற்றும் கருவிகள் மூலம் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தென் மாவட்ட எல்லைப் பகுதிகள் முழுவதும் தீவிர வாகனத் தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாம்பன் ரயில் பாலம் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல ராமேஸ்வரமும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
-
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications