குளத்தில் கார் விழுந்ததில் மனைவி, மகனுடன் என்ஜீனியர் பலி
தூத்துக்குடி: வேகமாக சென்ற கார் தடுமாறி குளத்தில் விழு்நததில் தூத்துக்குடி அனல் மின் நிலைய பொறியாளர், அவரது மனைவி, மகனுடன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
தூத்துக்குடி தெர்மல்நகர் குடியிருப்பில் வசித்து வந்தவர் சுடலைமுத்து மகன் சுடலையாண்டி (52). இவர் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் என்ஜினீயராக வேலை பார்த்தார்.
சுடலையாண்டி மற்றும் அவரது மனைவி சங்கரி (46), மகன்கள் சிவராம் (18), சுடர்சபரி (12) ஆகியோர் குடும்பத்துடன் திருமணவிழாவில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடியில் இருந்து திசையன்விளைக்கு காரில் சென்றனர்.
திருமணவிழா முடிந்தவுடன் நேற்று இரவு அதே காரில் சுடலையாண்டி தனது குடும்பத்துடன் திசையன்விளையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்துகொண்டிருந்தார்.
சுடலையாண்டி காரை ஓட்டினார். இரவு நேரம் குளிர்ந்த காற்று வீசியதால் காரின் ஜன்னல் கண்ணாடிகளை அடைத்திருந்தனர். முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த சிவராம் மட்டும் ஜன்னல் கண்ணாடியை திறந்து வைத்திருந்தார்.
இரவு 11 மணியளவில் மணியளவில் அந்த கார் ஆத்தூருக்கு முன்னதாக உள்ள நரசன்விளை ஊருக்கு அருகே வந்த போது திடீரென நிலைதடுமாறி ரோட்டின் அருகில் இருந்த குளத்துக்குள் பாய்ந்தது. அப்போது குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் கார் மூழ்கியது.
காரின் முன்பக்கம் அமர்ந்திருந்த சிவராம் மட்டும் ஜன்னல் வழியாக தப்பி கரைக்கு வந்தார். பின்னர் அவர் ஓடி சென்று அருகில் இருந்து ஊர் மக்களிடம் தகவலை கூறினார். அவர்கள் போலீசாருக்கு தகவல் கூறினர்.
பின்னர் ஊர்மக்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அவர்கள் அனைவரும் இணைந்து ஒரு லாரியில் கயிறு கட்டி குளத்தில் மூழ்கியிருந்த காரை மீட்டனர்.
பின்னர் காரை திறந்து பார்த்த போது அதில் இருந்த என்ஜினீயர் சுடலையாண்டி மற்றும் அவரது மனைவி சங்கரி (46), மகன் சுடர்சபரி (12) ஆகிய 3 பேரும் மூச்சுதிணறி இறந்து கிடந்தனர்.
சிவராம் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications