பொன்சேகா திமிர் பேச்சு-'எடிட்டர்' வேலை போச்சு!
கொழும்பு: இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா, தமிழக அரசியல் தலைவர்களை அரசியல் கோமாளிகள் என விமர்சித்துப் பேசியதை வெளியிட்ட சன்டே அப்சர்வர் நாளிதழின் ஆசிரியர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
கொழும்பிலிருந்து வெளியாகும் சன்டே அப்சர்வர் நாளிதழில் பொன்சேகாவின் பேட்டி வெளியாகியிருந்தது. அதில் தமிழக அரசியல் தலைவர்களான நெடுமாறன், வைகோ ஆகியோர் கோமாளிகள். அவர்கள் விடுதலைப் புலிகளிடமிருந்து பணம் பெற்று வருகின்றனர். இப்படிப்பட்டவர்களின் பேச்சையெல்லாம் பிரதமர் மன்மோகன் சிங் கேட்க மாட்டார்.
விடுதலைப் புலிகளை இலங்கை படைகள் ஒழித்து விட்டால் தங்களுக்கு வரும் வருமானம் பாதிக்கப்படுமே என்ற கவலையில் இவர்கள் உள்ளனர் என்று தாறுமாறாக உளறியிருந்தார் பொன்சேகா.
பொன்சேகாவின் இந்த திமிரான பேச்சு தமிழக அரசியல் தலைவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முதல்வர் கருணாநிதி முதல் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், பொன்சேகாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக வைகோ பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காரசாரமாக கடிதம் எழுதியிரு்நதார். பொன்சேகா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் இலங்கைத் தூதரை திருப்பி அனுப்ப வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
தமிழகத்தில் எதிர்ப்பு வெடித்ததைத் தொடர்ந்து இந்தியத் தூதர் அலோக் பிரசாத், நேற்று இலங்கை பாதுகாப்பு செயலாளரும், ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபயாவிடம், இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து கோத்தபயா வருத்தம் தெரிவித்தார்.
இந்த நிலையில் பொன்சேகாவின் முட்டாள்தனமான பேச்ச பிரசுரித்த சன்டே அப்சர்வர் நாளிதழின் ஆசிரியர் தினேஷ் வீரவன்சா, அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில், ஜெயதிலகே டி சில்வா புதிய எடிட்டராக நியமிக்கப்பட்டுள்ளார். டிசில்வா ஏற்கனவே எடிட்டராக இருந்தவர்.
பொன்சேகா விவகாரத்திற்கும் வீர வன்சா நீக்கத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தெரிவிக்க இலங்கை அரசு மறுத்து விட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications