திருமங்கலம்: தேமுதிக தனித்து போட்டி-விஜய்காந்த்
ஊட்டி: திருமங்கலம் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் அன்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறினார்.
தேமுதிகவின் வர்த்தக அணி மாநிலத் துணைச் செயலாளர் சௌந்தரபாண்டியன் ஊட்டியில் கட்டியுள்ள ஹோட்டலின் திறப்பு விழாவில் பங்கேற்க வந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையி்ல்,
திருமங்கலம் தொகுதியில் தேமுதிக கண்டிப்பாக போட்டியிடும். அங்கு தனித்து தான் போட்டியிடுகிறோம். விலைவாசி உயர்வாலும், தொடர் மின்வெட்டாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் திமுகவுக்கு அவர்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
மக்களை நம்பிதான் நான் கட்சி ஆரம்பித்துள்ளேன். அன்று முதல் இன்று வரை எந்த கட்சியுடனும் கூட்டணி சேர மாட்டேன் என்றுதான் சொல்லி வருகிறேன். தனித்துப் போட்டியிடுவதில் நான் உறுதியாக உள்ளேன். இந்தத் தொகுதியில் தேமுதிகவை மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள் என்றார்.
அவரிடம், நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி உங்களுடன் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், அதிமுகவுடன் கூட்டணிக்கு நீங்கள் முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, நான் யாரையும் நான் கட்சி ஆரம்பிக்கவில்லை. மக்களையும், தெய்வத்தையும் நம்பிதான் கட்சி ஆரம்பித்துள்ளேன். முதலில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கட்டும். அதன்பின் இது குறித்து பேசலாம் என்றார்.












Click it and Unblock the Notifications