கர்கரே மரணத்தில் மர்மம்: மத்திய அமைச்சர் சந்தேகம்-பாஜக எதிர்ப்பு

இதுகுறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அந்துலே, தீவிரவாதத்திற்குத்தான் கர்கரே பலியானாரா அல்லது வேறு காரணத்திற்காகவா என்று எனக்குத் தெரியவில்லை.
கர்கரே மிகவும் துணிச்சலான ஒரு அதிகாரி. அவரது தேசபக்தியை நான் நன்கு அறிவேன். மிகப் பெரிய அதிகாரி அவர். நாட்டுக்காக எந்த நேரத்திலும் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருந்தவர் அவர்.
ஆனால், தீவிரவாதிகள் பெரும் தாக்குதலில் ஈடுபட்டிருந்த தாஜ் ஹோட்டலுக்கோ அல்லது ஓபராய் ஹோட்டலுக்கோ செல்லாமல், ஒன்றுமே நடக்காத ஒரு இடத்திற்கு எப்படி கர்கரே போனார் என்று புரியவில்லை.
மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அவர் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி வந்தார். அந்த சம்பவத்தில் முஸ்லீம்கள் அல்லாதோர் சம்பந்தப்பட்டிருப்பதாக அவர் கண்டுபிடித்தார். மாலேகான் சம்பவத்திற்கு முஸ்லீம் சமுதாயம் அல்லாத தீவிரவாதிகளே காரணம் என்பதை அவர் கண்டுபிடித்தார்.
எனவே அவர் தீவிரவாதத்திற்குத்தான் உண்மையிலேயே பலியானாரா அல்லது வேறு காரணமா என்று எனக்குத் தெரியவில்லை. அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் நன்கு தெரியும். அவருக்கு நான் சல்யூட் செய்கிறேன் என்றார் அந்துலே.
கர்கரே, கூடுதல் கமிஷனர் அசோக் காம்தே, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலேஸ்கர் ஆகியோர் மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின்போது காமா மருத்துவமனை அருகே சுட்டுக் கொல்லப்பட்டது நினைவுகூறத்தக்கது.
பிரதமர் விளக்கமளிக்க பாஜக கோரிக்கை:
இதற்கிடையே, அந்துலேவின் பேட்டி குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி செய்தியாளர்களிடம் கூறுகையில், அந்துலேவின் கருத்துக்கள் தனிப்பட்ட நபருடையதா அல்லது அவர் வகிக்கும் அமைச்சரவை அல்லது அரசின் கருத்தைப் பிரதிபலிக்கிறதா என்பதை பிரதமர் மன்மோகன் சிங் தெளிவுபடுத்த வேண்டும்.
அவரது கருத்து விஷமத்தனமானது, எனவே இதுகுறித்து கண்டிப்பாக பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்றார் அவர்.
அந்துலேவின் இந்தப் பேட்டியால் புதிய பரபரப்பு எழுந்துள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications