மாணவர்களுக்கு பளார் விட்ட ஆசிரியர் மீது போலீஸில் புகார்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே மாணவர்களை அடித்ததாக ஆசிரியர் மீது போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டிணத்தில் அரடு ஐடிஐ உள்ளது. இதில் உடன்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து மகன் இளங்கோ, குரங்கன்தட்டு மாரியப்பராஜா மகன் முத்துகுமார் ஆகியோர் உலோக தகடு வேலையாள் பயிற்சி பிரிவில் படித்து வருகின்றனர்.
இடைவேளையின் போது மாணவர்கள் இளங்கோ, முத்துகுமார், எம்ஜீஆர், வீரபாகு, யோவன் டெண்சன், முருகன் உள்ளிட்ட சிலர் அரசு போக்குவரத்து கழக டெப்போ எதிரில் உள்ள கடையில் டீக்குடித்து விட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பொருத்துனர் பயிற்சி பிரிவு உதவி ஆசிரியர் ராஜதாஸ், மாணவர்கள் முத்துகுமார், இளங்கோ ஆகியோரது கன்னத்தில் அறைந்தார். மேலும் சட்டையை பிடித்து இழுத்து தாக்கினார். இதில் காயமடைந்த இருவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இச்சம்பவம் குறித்து இளங்கோ திருச்செந்தூர் போலீசில் புகார் செய்தார். ஆசிரியர் ராஜதாஸ் மீது இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் பாண்டி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications