'அந்துலே'-ராஜ்யசபாவில் அமளி-2 முறை ஒத்திவைப்பு
டெல்லி: மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் ஏ.ஆர்.அந்துலேவை பதவி நீக்கம் செய்யக் கோரி பாஜக எம்பிக்கள் இன்று மாநிலங்களவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.
மலேகாவ்ன் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்த மும்பை பயங்கரவாத எதிர்ப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்காரே தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் இன்னும் ஏதோ சில விஷயங்கள் மறைந்திருப்பதாக சர்ச்சையைக் கிளப்பினார் அந்துலே.
இதையடுத்து அவருக்கு எதிராக பாஜக, சிவசேனா ஆகியவை போராட்டத்தில் குதித்தன. இதைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அந்த ராஜினாமாவை காங்கிரஸ் இன்னும் ஏற்கவில்லை.
இந் நிலையில் இன்று காலை மாநிலங்களவை கூடியதும் பாஜக உறுப்பினர்கள் அந்துலேவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அவையின் மையப் பகுதியில் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியது. அப்போதும் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். இந் நிலையில் எல்.ஐ.சி. சட்டத் திருத்தம் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு இடதுசாரிகள், அதிமுக ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் அமளி ஏற்பட்டது. இதனால் அவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications