காங்.க்கு எதிராக தமிழ் அமைப்புகள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்தும் இயக்குனர் சீமான், பெரியார் திராவிடா கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோரை விடுதலை செய்யக் கோரியும் சென்னை மேமொரியல் அரங்கம் அருகே மக்கள் எழுச்சி இயக்கம் போராட்டம் நடத்தியது.

இதி்ல் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் எழுத்தாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் எழுச்சி இயக்கத் தலைவர் எழிலன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, கிளர்ச்சியாளன் இதழ் ஆசிரியர் சேசுபாலன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி க.அருணபாரதி, தமிழ்த் தேச மார்க்சியக் கட்சிப் பொதுச் செயலாளர் இராசேந்திர சோழன்,

தமிழக பெண்கள் செயற்களம் இசைகொடி, மனித உரிமை ஆர்வலர் டி.எஸ்.எஸ்.மணி, வழக்கறிஞர்கள் தமிழ்ப் பேரவை அமைப்பாளர் இளந்திரையன், தமிழக மக்கள் வழக்கறிஞர் இயக்கத் தலைவர் வெற்றிச் செல்வன், தமிழம்மா பதிப்பக உரிமையாளர் சின்னப்பாத் தமிழர் உள்ளிட்டோர் பேசினர்.

புதுச்சேரியிலும்..:

அதே போல காங்கிசாரைக் கண்டித்து புதுச்சேரியில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுவை சாரம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி மாநில பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு அய்யப்பன் தலைமை தாங்கினார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் உட்பட பல அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் இதில் கலந்து கொண்டனர்.

இதில் பெரியார் தி.கவினர் காங்கிரஸ் கட்சிக்கு சவப்பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து வந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+