முல்லியவளை நகரை பிடித்த இலங்கை ராணுவம்
கொழும்பு: முல்லைத் தீவுக்கு அருகில் உள்ள முல்லியவளை என்ற நகரைப் பிடித்துள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
வன்னிப்பகுதியை புலிகளிடம் இருந்து கைப்பற்றுவதற்காக ராணுவம் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய வட மாவட்டங்களில் கடும் சண்டை நடந்து வருகிறது.
இங்கு விடுதலைப் புலிகள், ராணுவத்திற்கு கடும் போட்டியைக் கொடுத்து மோதி வருவதால் ராணுவத்தின் முன்னேற்றம் மிக மிக மெதுவாக உள்ளது.
இந்த நிலையில், முல்லைத்தீவுக்கு மிக அருகே உள்ள முல்லியவளை நகரில் கடும் தாக்குதல்களை மேற்கொண்டு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த நகரை கைப்பற்றி விட்டதாக ராணுவம் அறிவித்தது.
முல்லியவளை நகரில் தாக்குதல் மேற்கொண்ட ராணுவத்தின் 59வது படைப்பிரிவுக்கு ஒத்துழைப்பாக விமானப்படை ஜெட் விமானங்கள் மற்றும் எம்.ஐ24 ஹெலிகாப்டர்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்ட தாகவும், அதற்கு பதில் தாக்குதல் நடத்திய புலிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் பல விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும், முல்லிய வளைக்கு வடக்கே புலிகளின் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முல்லியவளை கைப்பற்றப்பட்டிருப்பதன் மூலம் தண்ணியூத்து என்ற பகுதியும் கைப்பற்றப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இதற்கிடையே, இப்பகுதி வழியாக ராணுவம் தொடர்ந்து முன்னேறுவற்கு விடுதலைப் புலிகள் அமைத்துள்ள மண் அரண்கள் கடும் சவாலாக உள்ளன. ராணுவத்தினரை முன்னேறச் செய்வதும், அதிக அளவிலான வீரர்களை இப்பகுதிகளுக்கு அனுப்புவதும் சிரமமான காரியம் என ராணுவம் கூறுகிறது.
பொட்டு அம்மன் ஒதுக்கப்படவில்லை:
இந்த நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் ஓரம் கட்டப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மையாக இருக்காது என்று விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பை நடத்தி வரும் கருணா கூறியுள்ளார்.
அது உண்மை அல்ல. பொட்டு அம்மன் முக்கியமான தலைவர். அவரை புலிகள் ஒதுக்குவார்கள் என்பது நிஜமல்ல. அப்படி வெளியாகியுள்ள செய்திகளும் உண்மையாக இருக்காது என்று கூறினார் கருணா.
மேலும், முல்லைத்தீவு பிரிவில் இலங்கை ராணுவத்துக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றி புலிகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஆகும். ஏனெனில் முல்லைத் தீவில் எங்காவது ஒரு பகுதியில்தான் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கக்கூடும் என்றும் கருணா தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications