விழுப்புரம் அருகே பஸ் கவிழ்ந்து 11 பேர் படுகாயம்!
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் அருகே சங்கராபுரத்தில் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததில் பெண் உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.
திருக்கோவிலூரில் இருந்து இரவு 10 மணிக்கு ஒரு தனியார் பஸ் கள்ளக்குறிச்சிக்கு நோக்கி புறப்பட்டடது. பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
பஸ் மேலேரி என்ற கிராமம் அருகே சென்ற போது சாலை ஓரத்தில் சிறிய பாலத்தில் மோதி அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த ஒரு பெண் உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications