துண்டு துண்டாய் கிடந்தவர் பெங்களூர் தமிழ்ப் பெண்
கிருஷ்ணகிரி: கொலை செய்யப்பட்டு தலை, கை, கால்கள் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு உடல் உறுப்புகள் பிளாஸ்டிக் பைகளில் தனித்தனியே கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வீசப்பட்ட இளம் பெண் பெங்களூரைச் சேர்ந்த தமிழ்ப் பெண் என்று தெரியவந்துள்ளது.
கடந்த 30ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த மத்தூர் அருகே கால்வாயில் ரத்தக்கறையுடன் ஒரு பிளாஸ்டிக் பை மிதந்தது. அதில் அதில் நிர்வாண நிலையில் ஒரு இளம் பெண்ணின் உடல் பகுதி மட்டும் இருந்தது.
தலை, கை, கால்கள் இல்லை. அந்த பையில் முழங்காலுக்கும், கணுக்காலுக்கும் இடையிலான கால் எலும்பும், ஜீன்ஸ் பேண்ட்டும் இருந்தன.
கிருஷ்ணகிரி-புதுச்சேரி நெடுஞ்சாலையில் பர்கூர் அருகே திருவண்ணாமலை ரோட்டின் ஓரத்தில் கிடந்த இன்னொரு பிளாஸ்டிக் பையில் அந்தப் பெண்ணின் இடது கை 5 துண்டுகளாக வெட்டப்பட்டுக் கிடந்தது. கை விரலில் ஒரு தங்க மோதிரம் இருந்தது.
இந்தப் பெண்ணின் துண்டிக்கப்பட்ட இடுப்புபகுதி ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி மேல்மலையனூர் அருகே நாரணமங்கலம் கிராமத்தில் சாலையில் கிடந்தது. இந்த இடுப்புப் பகுதியை கொண்டு வந்ததாகக் கருதப்படும் சூட்கேஸ் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் கிடந்தது.
திருவண்ணாமலை அருகே மங்களம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் இந்தப் பெண்ணின் இடது கால் கிடந்தது. ஆனால், தலைப் பகுதி மட்டும் இன்னும் கிடைக்கவில்லை.
இந்த மகா கொடூரமான கொலை குறித்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
அந்தப் பெண்ணின் ஜீன்சில் இருந்த ஒரு துண்டுச் சீட்டில் பீப் ஸ்டால் ரோடு என கன்டத்தில் எழுதப்பட்டிருந்தது. இதனால் அந்தப் பெண் கர்நாடகத்தை, குறிப்பாக பெங்களூரைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்தனர்.
தமிழக போலீசார் பெங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் சமீபத்தில் பதிவான இளம் பெண்கள் காணாமல் போன வழக்குகள் குறித்த விவரங்களை சேகரித்தனர்.
அப்போது பெங்களூர் பசவனகுடி காவல் நிலையத்தில் கடந்த 29ம் தேதி இளம்பெண் ஒருவரை காணவில்லை என்ற வழக்கு பதிவாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த புகார் கொடுத்தவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது கொலை செய்யப்பட்டவர் பெங்களூர் லிங்கராஜபுரத்தை சேர்ந்த சம்பங்கி என்பவரின் மனைவி லட்சுமி (28) என்பது தெரியவந்தது.
லட்சுமி இதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கீர்த்தனா (6), சேத்தனா (2) ஆகிய குழந்தைகள் உள்ளனர்.
ஆசிரியை லட்சுமி எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று தெரியவில்லை. அவரது தலை பகுதியும் இன்னும் கிடைக்கவில்லை.
பெங்களூர் போலீஸ் உதவினால் மட்டுமே இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணையை தமிழக போலீசாரால் நடத்த முடியும்.
தொடர்பான செய்திகள்:
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications