சத்யம் வங்கி கணக்கு ஆவணங்கள் மிஸ்ஸிங்!
ஹைதராபாத்: சத்யம் நிறுவனமும் அதன் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜுவும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகத் தந்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் அதிர்ச்சி... சத்யம் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் முழுமையாகக் 'காணாமல்' போய்விட்டனவாம்!
சத்யம் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், பதிவு அலுவலகம் உள்பட முக்கிய அலுவலகங்களில், நிறுவன பதிவாளர் அலுவலக அதிகாரிகள் நடத்திய ரெய்டில், வங்கிக் கணக்கு விவரங்கள் மட்டும் ஆவணங்கள் மட்டும் கிடைக்கவில்லை.
இந்த அதிர்ச்சிகரமான உண்மை, சத்யம் நிறுவனத்தில் நடந்துள்ள முறைகேடுகளின் அளவு ரூ.7,000 ஆயிரம் கோடிதானா... அதைவிட பல மடங்கா என்ற சந்தேகத்தை புலனாய்வு அதிகாரிகளுக்கு ஏற்படுத்திவிட்டது.
அதிர்ந்து போன நிறுவன பதிவாளர் அலுவலக அதிகாரிகள், சிபிஐ, செபியின் தீவிர குற்றவியல் புலனாய்வு பிரிவான Serious Fraud Investigation Office (SFIO), ரிசர்வ் வங்கி, உள்ளூர் போலீஸ் என அனைத்துத் தரப்பும் இணைந்த கூட்டு புலனாய்வு நடவடிக்கைக்கு பரிந்துரைத்துள்ளது.
இன்று சத்யம் நிதித் துறைத் தலைவர் சீனிவாஸ் வாட்லாமணியைக் கைது செய்த பிறகே இதில் உண்மை நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடிட்டர்கள் மீது நடிவடிக்கை:
இதற்கிடையே சத்யம் நிறுவனத்தின் இல்லாத பணத்தைத் தணிக்கை செய்த கில்லாடி தணிக்கை நிறுவனமான பிரைஸ்வாட்டர் கூப்பர் ஹவுஸ் மீது நடவடிக்கை எடுக்க இந்திய சார்ட்டட் அக்கவுண்ட்டன்ட்ஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications