ஷேர் நஷ்டம் - தாயின் சமாதியில் தொழிலதிபர் தற்கொலை
தூத்துக்குடி: பங்குச் சந்தையில் போட்ட முதலீடுகள் பெரும் இழப்பை சந்தித்ததால் மனம் உடைந்த வர்த்தகர், தனது தாயின் சமாதியில் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி எழில் நகரை சேர்ந்தவர் தனசேகரன். லாட்டரி தொழில் செய்து வந்த தனசேகரன், லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டதால் பங்கு சந்தையில் முதலீடு செய்தார்.
பங்கு சந்தை வீழ்ச்சி காரணமாக தனசேகரனுக்கு பெருந்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பல லட்ச ரூபாய் அளவில் கடன் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி சண்முக புரத்தில் உள்ள தங்களது பூர்வீக வீட்டை விற்று கடனை அடைக்க முடிவு செய்தார். இதற்கு அவரது மனைவி ரோசம்மாள் ஆட்சேபனை தெரிவித்தார்.
இதனால் மனமுடைந்த தனசேகரன் தூத்துக்குடி மையவாடியில் உள்ள தனது தாயார் சமாதியில் விஷம் குடித்து விட்டு அருகிலேயே படுத்துக் கொண்டார்.
சில நிமிடங்களில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரே எழுந்து அரசு மருத்துவமனைக்கு சென்று விஷம் குடித்தது பற்றி கூறினார்.
இதையடுத்து டாக்டர்கள் சிகிச்சை செய்யத் தயாரானார்கள். ஆனால் தனசேகரன் உயிரிழந்தார். இதுகுறித்து தென்பாகம் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் விசாரணை நடத்தி வருகிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications