கடற்கரை காந்தி சிலை அருகே தமிழர் பாதுகாப்பு இயக்கம் போராட்டம் நடத்த தடை
சென்னை: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று நடைபெறவுள்ள கருப்புக் கொடி ஏந்தி, மெளன விரதம் நடத்தும் போராட்டத்தை கடற்கரை காந்தி சிலை அருகே நடத்த காவல்துறை தடை விதித்துள்ளது.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக இன்று சென்னை காமராஜர் சாலை, காந்தி சிலைக்கு முன்னால் மவுன விரதப் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு உள்ளார்கள். ஆனால் இந்த இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என காவல்துறை அறிவித்துள்ளது.
இத்தகைய போராட்டங்களை நடத்துவதற்காக அனுமதிக்கப்படுகின்ற இடங்களில் ஒன்றாக காந்தி சிலைக்கு அருகில் உள்ள இடம் இல்லை என்பதாலும், 30-ந் தேதி காந்தி மறைந்த நாள் என்பதாலும்,இந்தப் போராட்டத்தை வேறொரு அனுமதிக்கப்பட்ட இடத்தில் நடத்திக்கொள்ளலாம் என்று காவல் துறை சார்பில் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, அவர்களிடமிருந்து முறைப்படி அனுமதிக்கப்பட்ட இடம் கோரி விண்ணப்பிக்கப்படுமானால், இந்த மவுன விரதப் போராட்டம் நடத்திட காவல் துறை அனுமதிக்கும்.
காவல் துறை ஆணையை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனறு ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திரண்டு வருக - நெடுமாறன்
இதற்கிடையே, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை தமிழனத்தையே அழித்து ஒழிக்கும் வெறிகொண்டு சிங்கள ராணுவம், தமிழ் மக்கள் மீது ஏவுகணையை ஏவியும் குண்டுகள் வீசியும் கொன்று குவித்து வருகிறது. நாளுக்கு நாள் அங்கிருந்து வரும் செய்திகள் நமது நெஞ்சங்களை பிளக்கின்றன.
இந்திய அரசோ போர் நிறுத்தத்தை வலியுறுத்தாமல் காலம் கடத்தும் தந்திரத்தை கையாண்டு சிங்கள அரசுக்கு துணை போகிறது. இந்த நிலையில், இலங்கை தமிழர்களை பாதுகாக்க முன்வரும்படி தமிழ் நாட்டிலுள்ள அனைத்து அமைப்புகளையும் அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு முன்பாக கறுப்பு கொடி ஏந்தி மவுனவிரத போராட்டம் நடைபெறுகிறது.
இப்போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து தமிழர் அமைப்புகள் மற்றும் தொழிலாளர், விவசாயிகள், மகளிர், இளைஞர் மாணவ அமைப்புகள் மற்றும் அனைத்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு தமிழ் மக்களின் ஒட்டு மொத்த வேதனையை வெளிப்படுத்த முன்வருமாறு அனைவரையும் வேண்டி கொள்கிறேன் என்று கோரியிருந்தார்.
காந்தி சிலை அருகே போராட்டம் நடத்த அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டிருப்பதால் வேறு இடத்திற்குப் போராட்டம் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications