முத்துக்குமாருக்கு தமிழக அரசு நிதி - நிராகரித்தது குடும்பம்
சென்னை: தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாரின் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த ரூ. 2 லட்சம் நிதியுதியை அவரது குடும்பத்தினர் நிராகரித்து விட்டனர். பணம், பொருள் கொடுத்து தங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என முத்துக்குமாரின் தங்கை கணவர் கூறியுள்ளார்.
சட்டசபையில் நேற்று அமைச்சர் மு.க.ஸ்டாலின், தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்தார்.
இந்த உதவியை முத்துக்குமாரின் தங்கை கணவர் கற்குவேல் ஏற்க மறுத்து விட்டார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு அறிவித்த ரூ.2 லட்சம் நிவாரண உதவி தொகை எங்களுக்கு வேண்டாம். தமிழ் மக்கள் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் தான் முத்துக்குமார் உயிரை விட்டார். அதற்காக எங்களுடைய குடும்பம் சந்தோஷம் அடைகிறது.
பணம் - பொருள் கொடுத்து எங்களை கொச்சைப்படுத்த வேண்டாம். தனி நபருடைய உணர்வு தான் இது, அரசியல் சம்பந்தப்பட்டதல்ல.
தீக்கிரையாகியதை தொடர்ந்து இப்போது வரை பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்கள் உணர்வுகளை தெரிவித்தனர்.
இறுதிச் சடங்கில், தமிழ் உணர்வாளர்களும் நெருங்கிய உறவினர்களும் அதிகம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
-
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications