சேத்தியாதோப்பில் ராஜீவ் காந்தி சிலை உடைப்பு - காங். போராட்டம்
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில், ராஜீவ் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது. இதைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சேத்தியாதோப்பில் சென்னை - கும்பகோணம் சாலையில் பஸ் நிலையம் அருகே உள்ள ராஜீவ்காந்தி சிலையை நேற்று நள்ளிரவு யாரோ மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தி விட்டனர்.
சிலையின் தலை, கை, கால் பகுதி உடைக்கப்பட்டது. இன்று காலை இதைப் பார்த்து காங்கிரஸார் அதிர்ச்சி அடைந்து அங்கு திரண்டனர்.
கடலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நெடுஞ்செழியன் தலைமையில் ராஜீவ்சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிலையை உடைத்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications