திருப்பதி கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருப்பதி: திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி உள்பட நாட்டின் முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கு ஏற்கனவே மிரட்டல் இருப்பதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான அலுவலகத்திற்கு நேற்று காலை பேக்ஸ் மூலம் மிரட்டல் கடிதம் வந்தது.
அதில், திருமலைப் பகுதியில் அன்னிய மத பிரசாரத்திற்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இது நீடிக்குமானால், 12ம் தேதிக்குள் திருமலை, திருப்பதி தேவஸ்தானம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்று மிரட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து கோவிலுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு தேவஸ்தானம் சார்பில் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திருப்பதி கோவிலுக்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆயுதம் தாங்கிய போலீஸார், வெடிகுண்டுகளை கண்டறியும் நிபுணர் படையும் குவிக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய்கள் மூலம் சோதனையும் நடத்தப்பட்டது. இருப்பினும் குண்டு எதுவும் சிக்கவில்லை.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் கோவிலுக்கு வருவோர் சோதனையிடப்படுகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications