மதுரை: தனி ஈழம் கோரி உண்ணாவிரதம்-மாணவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் தனி ஈழம் கோரி உண்ணாவிரதம் இருந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழ் ஈழத்தை தனிநாடாக அங்கீகரிக்க கோரி நாகப்பட்டினத்தில் தமிழ் ஈழ ஆதரவு முன்னணி என்ற அமைப்பினர் மாநாடு நடத்துவதாக இருந்தது. ஆனால் இந்த மாநாட்டிற்கு போலீசாரின் அனுமதி திடீரென மறுக்கப்பட்டது.
தடையை நீக்க கோரியும், தமிழ் ஈழத்தை தனிநாடாக அங்கீகரிக்க கோரியும், அந்த அமைப்பினர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தனர்.
அதன்படி இவ்வமைப்பை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் 7 பேர் மதுரை கலெக்டர் அலுவலகம் எதிரே திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உண்ணாவிரத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications