இலங்கையில் துயரம் - பிறந்த நாளை ரத்து செய்தார் ஸ்டாலின்
சென்னை: இலங்கைத் தமிழர்கள் இன்னலில் வாடி வரும் நிலையில் தனது பிறந்த நாளை தொண்டர்கள் கொண்டாட வேண்டாம் என உள்ளாட்சித் துறை அமைச்சரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் மார்ச் முதல் நாளன்று எனது பிறந்தநாள் என்பதால், கழகத்தோழர்களும்-இளைஞர் அணி நண்பர்களும் அதனைக் கொண்டாடுவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
இலங்கையிலே நம் தமிழ்க் குடும்பங்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள். ராணுவத் தாக்குதலை நிறுத்தி அப்பா வித்தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். அவர்கள் நிம்மதியாக வாழ, வழிவகை செய் திட வேண்டுமென்று, நம் ஒப்பற்ற தலைவர் கலைஞர் பல்வேறு வகைகளில் முயற்சி மேற்கொண்டு வருவதை நாடே நன்கு அறியும்.
அப்பாவித் தமிழ் மக்களை காப்பாற்றிட, இரு தரப்பினரும் போரை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி அண்மை யில் தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் தமிழகம் முழுவதும் சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் எழுச்சிமிகு மாபெரும் "இளைஞர் சங்கிலி'' நடத்தப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் எனது பிறந்தநாள் விழா வினை நடத்திட என் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, என்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடு கின்ற முயற்சியினை மேற் கொண்டுள்ள கழகத் தோழர் களுக்கும்-இளைஞர் அணி நண்பர்களுக்கும் நான் அன்புடன் தெரிவித்துக் கொள்வது, உங்கள் ஒவ் வொருவரின் அன்பும், வாழ்த்தும் எந்நாளும் எனக்குண்டு என்பதை நான் நன்கு அறிவேன்.
எனவே, எக்காரணம் கொண்டும் பிறந்தநாள் விழா கொண்டாடுவது, அதற்கான விளம்பரப் பதாகைகள் வைப்பது, சுவரொட்டிகள் ஒட்டுவது போன்ற முயற்சி களில் கண்டிப்பாக ஈடுபட வேண்டாமென உங்களில் ஒருவனாகக் கேட்டுக் கொள்கிறேன் என்று கோரியுள்ளார்.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications