திமுகவுக்கு எதிராக வாக்களிக்க போலீஸ் குடும்பங்கள் முடிவு?

Subscribe to Oneindia Tamil

மதுரை: லோக்சபா தேர்தலில் திமுகவுக்கு எதிராக வாக்களிக்க போலீஸ் குடும்பங்கள் முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் உலா வரத் தொடங்கியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி வழக்கறிர்கள்- போலீஸ் இடையே நடந்த கடும் மோதலில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள், பொது மக்கள், நீதிபதிகள், பத்திரிக்கையாளர்கள் காயமடைந்தனர்.

இந்த நிலையில் சென்னை உயர் நீதி சம்பவத்தை காரணம் காட்டி போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால், வரும் பாராளுமன்றத் தேர்தலில் திமுக அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக முன்னாள் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் சிலர் ரகசிய கூட்டம் போட்டு முடிவு செய்துள்ளனர்.

இந்த முடிவை தமிழகத்தில் உள்ள அனைத்து போலீசார் குடும்பங்கள் பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவலை மோப்பம் பிடித்த உளவுத்துறை இதை உரியவர்களிடம் கொண்டு செல்ல தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகின்றது.

இதே போன்று வழக்கறிஞர்களை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய ஒரு சில வழக்கறிஞர்கள் கூடி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இனால் தமிழக அரசு இடியாப்ப சிக்கலில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+