ஜெ. பிரதமராகலாம்-ஜோதிடர்கள் கணிப்பு

தேர்தலுக்கு நேரம் சரியில்லை..
லோக்சபா தேர்தல் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. ஆனால் அது சரியான நேரம் இல்லை என்றும் நட்சத்திரங்களும், வானிலையும் கூடி வராத காலத்தில் தேர்தலை திட்டமிட்டுள்ளதால், தேர்தலுக்கு முன்பு பெரும் குழப்பங்களும் வன்முறையும் மூளும் என பீதியைக் கிளப்பியுள்ளனர் ஜோதிடர்கள்.
ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த ஜோதிடர் ஜெகன்னாத் மிஸ்ரா கூறுகையில், இந்திய அரசியலமைப்புக்கு இந்த தேர்தல் நல்லதல்ல. அரசியல் கிரிமினல்களின் கூடாரமாகி விட்டது. வரும் காலம் நல்லதாக இருக்காது என்பதே எனது கணிப்பு.
தேர்தலுக்கு முன்பு தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறும் வன்முறைகள் மூளும் (வன்முறை இல்லாமல் இந்தியத் தேர்தல் ஏது?) என்கிறார் மிஸ்ரா.
இதுமட்டுமல்லாமல் தேர்தல் முடிந்த பின்னர், பூகம்பம், கடல் கொந்தளிப்புகள், புயல்கள் போன்ற இயற்கை சீற்றங்களும் ஏற்படுமாம். ஏன் மினி சுனாமிகள் கூட வரலாமாம். இதனால் உயிருக்கும், பொருளுக்கும் பேரிழப்பு ஏற்படும் எனவும் ஜோதிடர்கள் பயமுறுத்துகிறார்கள்.
மறுபடியும் கூட்டணி ஆட்சிதானாம்...
அசோக் சனோரியா என்பவர்தான் மிகப் பெரிய கணிப்பை கணித்துள்ளார். அதாவது, மறுபடியும், மத்தியில் கூட்டணி ஆட்சிதான் வருமாம். இவரது கணிப்புகள்தான் படு சுவாரஸ்யமானதாக உள்ளன. காரணம், ஜெயலலிதாதான் அடுத்த பிரதமர் என்கிறார் இவர்.
சனோரியா கூறுகையில், அடுத்த பிரதமர் நிச்சயம் ஒரு பெண்தான். அதிலும் ஜெயலலிதாவின் ஜாதகம் மிகவும் வலுவாக உள்ளது. எனவே அவருக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
அத்வானிக்கும் நேரம் சரியில்லையாம்..
எல்.கே.அத்வானிக்கு இப்போது நேரம் சரியில்லை. உ.பி. முதல்வர் மாயாவதிக்கும் பிரதமராகக் கூடிய வாய்ப்புகள் சிறப்பாகவே உள்ளன என்கிறார் சனோரியா.












Click it and Unblock the Notifications