Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியல் நாகரீகம் தாழ்ந்து விட்டது-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னை மருத்துவமனையில் வந்து பார்த்ததால் மதிமுகவிலிருந்து கண்ணப்பன் நீக்கப்பட்டது, தமிழ்நாட்டு அரசியலில் அரசியல் பண்பாடு, அரசியல் நாகரீகம் எந்த அளவுக்கு தாழ்ந்து விட்டது என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மதிமுகவில் இருந்த கண்ணப்பன் உங்களை சந்தித்ததால் பிரச்சனை ஏற்பட்டு அவர் திமுகவுக்கு வந்துள்ளார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது நீங்கள் சந்தித்ததால்தான், அவர் உங்களை மருத்துவமனையில் வந்து பார்த்திருக்கிறார். எனவே நீங்கள் அவரைப்போய் பார்த்ததுதான் தவறாகப் போய் விட்டதா? என்று நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த கருணாநிதி,

தமிழ்நாட்டு அரசியலில் அரசியல் பண்பாடு, அரசியல் நாகரீகம் எந்த அளவுக்கு தாழ்ந்து விட்டது என்பதற்கு இது மேலும் ஒரு உதாரணம். காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையே எவ்வளவோ மாறுபாடுகள் வேறுபாடுகள் இருந்தபோதிலும் என் தாயார் அஞ்சுக்கத்தம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அன்றைய சுகாதார அமைச்சர் ஜோதி அம்மாள் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தார்.

அந்த மருத்துவமனையில் என் தாயார் மறைந்து விட்ட நிலையில் அவரது உடலை இல்லத்துக்கு நாங்கள் எடுத்து வந்தபோது எங்களுக்கு முன்னதாகவே அன்றைய முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் வந்து எனக்கு ஆறுதல் கூற காத்திருந்தார்.

அவர் மறைந்தபோது, அரசு மரியாதையுடன் அவர் உடலை அடக்கம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் திமுக அரசு செய்தது.

இதை வியந்து பாராட்டி அன்றிருந்த மேல்சபை காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜாராம் நாயுடு கூறுகையில், காமராஜரின் இறுதிச் சடங்குகளை அவரது சகோதரர்கள் இருந்தால் கூட கருணாநிதி செய்கிற அளவுக்கு செய்திருப்பார்களா என்றார்.

அன்று இரவோடு இரவாக கொட்டுகின்ற மழையில் கிண்டி சென்று காமராஜர் உடலை அடக்கம் செய்ய தேவையான நிலத்தை தேர்ந்தெடுத்து அனைத்து ஏற்பாடுகள் செய்ததை காங்கிரஸ் இயக்கம் மறக்கவே மறக்காது என்றும் ராஜாராம் நாயுடு குறிப்பிட்டார்.

ராஜாஜி மறைந்தபோது அவர் என் நண்பரான எதிரி என்று குறிப்பிட்ட தந்தை பெரியார் சுடுகாட்டுக்கே வந்து, ராஜாஜி உடல் எரியூட்டப்பட்டபோது தேம்பித்தேம்பி அழுத காட்சியை அவர் அருகில் அமர்ந்து கண்டவன் நான்.

எனக்கும் அருமை நண்பர், எம்ஜிஆருக்கும் இடையே எவ்வளவோ வேறுபாடு, மாறுபாடு இருந்தும் கூட அவர் உடல் நலிவுற்று வெளிநாடுகளில் சிகிச்சை பெற்றபோது தமிழ்நாட்டு மக்கள் அவர் உயிர் பிழைக்க பிரார்த்தனை செய்தனர். அப்போது முரசொலியில் நானும் பிரார்த்திக்கிறேன் என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதினேன்.

எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு, எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த பல்கலைக்கழகம் தொடங்கும் முன்பே அவர் இறந்து விட்டார்.

அடுத்து முதல்வராக நான் பொறுப்பேற்ற நிலையில் அந்தப் பல்கலைக்கழகத்தை தொடங்க முயற்சி எடுத்து, அன்றைய குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமனை அழைத்து எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தை தொடங்கி வைத்தேன்.

இவையெல்லாம் கடந்த கால கண்ணியமும் நாகரீகமும் நிறைந்த அரசியல் நிகழ்வுகள் என்றார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+