மே 4 முதல் என்ஜினியரிங் சீட் விண்ணப்பங்கள்
சென்னை: பொறியியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் மே 4ம் தேதி முதல் அதற்கான விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 354 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 10 ஆயிரம் இடங்களில் கடந்த ஆண்டு 70 ஆயிரம் இடங்கள் அரசு ஒதுக்கீடாக இருந்தன.
ஆனால் இந்த ஆண்டு அது குறையும் என தெரிய வந்துள்ளது. இதற்கு அரசு கட்டுப்பாட்டில் இருந்த சில பொறியியல் கல்லூரிகள் பல்கலைக்கழகமாக மாறவிருப்பதே காரணம். இதனால் அந்த கல்லூரிகளில் இருந்து கிடைக்கும் அரசு ஒதுக்கீடு கிடைக்காமல் போய்விடும். இதனால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் புதிய பொறியியல் கல்லூரிகளை திறக்க முடிவு செய்திருப்பதன் மூலம் இப்பிரச்சினை பெரிய அளவில் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவு வெளிவந்த மறுநாள் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால், இம்முறை தேர்வு முடிவுகளுக்கு முன்னதாகவே கொடுத்துவிட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான தேதியை மே 4 என அறிவித்துள்ளது. விண்ணப்ப படிவங்களை அச்சடிக்கும் பணியை விரைவில் துவக்க இருக்கிறது.
தற்போது தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை அடுத்து பொறியியல் கல்லூரிகளுக்கான மவுசு குறைந்துவிட்டதாக கருதப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications