களக்காட்டில் மண்ணுளி பாம்பு கடத்திய 3 பேர் கைது
களக்காடு: மதுரைக்கு வேனில் கடத்தி செல்லப்பட்ட மூன்று மண்ணுளி பாம்புகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திசையன்விளையில் இருந்து மதுரைக்கு வேனில் மண்ணுளி பாம்பு கடத்தப்படுவதாக களக்காடு புலிகள் காப்பாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து துணை இயக்குனர் பத்ரகாளி உத்தரவின் பேரில் திருக்குருங்குடி வனச்சரகர் தேவசகாயம், தலைமயைலான வனத்துறையினர் வள்ளியூர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனில் இருந்த சூட்கேசில் 3 மண்ணுளி பாம்புகள் மதுரைக்கு கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் வேனில் இருந்த 4 பேர் தப்பியோடி விட்டனர். 3 பேரை கைது செய்து வனத்துறையினர் விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் சாத்தூரை சேர்ந்த அருணாச்சலம், காரைக்குடியை சேர்ந்த ராஜேந்திரன், தேவகோட்டையை சேர்ந்த மகேந்திரன், என்பது தெரியவந்தது.
திசையன்விளை அருகேயுள்ள பொட்டகுளத்தை சேர்ந்த முருகன் மற்றும் அவரது தம்பி ஐயப்பன் ஆகியோரிடம் இருந்து 3 மண்ணுளி பாம்புகளை தாங்கள் வாங்கியதாகவும், மதுரையில் உள்ள புரோக்கரிடம் பல லட்ச ரூபாய்க்கு இவற்றை விற்க கொண்டு செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் தப்பியோடிய திசையன்விளையை சேர்ந்த முருகன், அவரது தம்பி ஐயப்பன், விஜயநாராயணத்தை சேர்ந்த ராஜகோபால், வள்ளியூர் கருப்பசாமி ஆகியோரை தேடி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications