சஞ்சய் தத் போட்டியிட சுப்ரீம் கோர்ட் தடை!

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், ஆயுதத் தடைச் சட்டத்தின் கீழ் சஞ்சய் தத்துக்கு ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது தடா கோர்ட்.
இதையடுத்து சஞ்சய் தத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சில நாட்கள் இருந்தார். பின்னர் ஜாமீன் கோரி அவர் உச்சநீதிமன்றத்தை அணுகினார். இதையடுத்து சுப்ரீம் கோர்ட் அவருக்கு ஜாமீன் அளித்தது. இருப்பினும் அவரது தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லை.
இந்த நிலையில் லக்னோ தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பி்ல சஞ்சய் தத் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்தது. இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் தான் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக மும்பை கோர்ட் விதித்த தண்டனையை சஸ்பெண்ட் செய்து வைக்க வேண்டும் என்று கோரி சஞ்சய் தத் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம், ஆர்.எம். லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று பிற்பகல் விசாரித்தது.
விசாரணையின் முடிவில், மனுதாரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க நாங்கள் விரும்பவில்லை. தண்டனையை நிறுத்தி வைப்பதற்கு பொருத்தமான வழக்கு அல்ல இது.
இந்த வழக்கையும், முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவின் வழக்கையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்து, சஞ்சய் தத்தின் கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.
இதனால் சஞ்சய் தத் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சஞ்சய் தத்தால் போட்டியிட முடியாவிட்டால் அவரது மனைவி மான்யதாவை போட்டியிட வைப்போம் என ஏற்கனவே அமர்சிங் கூறியுள்ளார். எனவே மான்யதாவை லக்னோவில் சமாஜ்வாடி நிறுத்தலாம் என தெரிகிறது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications