பிரபல ரவுடி திருச்சி குணா அரசியல் பிரவேசம்
சென்னை: பிரபல ரவுடி கும்பல் தலைவர் திருச்சி குணா அரசியலில் புகுகிறார்.
திருச்சி குணாவைத் தெரியாத போலீஸ்காரர்களோ, ரவுடிகளோ திருச்சி மாவட்டத்தில் இருக்க முடியாது. அந்த அளவுக்கு தாதாவுக்கெல்லாம் தாதாவாக வலம் வருபவர் குணா.
அவரிடம் உள்ள ஆள் பலம், திருச்சி மாவட்டத்தில் வேறு எந்த தாதாவுக்கும் இல்லாததால், திருச்சி குணாவின் கையே இன்றளவும் அங்கு ஓங்கியுள்ளது.
இந்த நிலையில், திருச்சி குணா அரசியல் பிரவேசம் செய்கிறார். உறையூரில் வசித்து வரும் குணா, தனது ரவுடி வாழ்க்கை நரகமாக இருந்ததாக கூறுகிறார்.
தனது அரசியல் பிரவேசம் குறித்து குணா கூறுகையில்,
சிறு வயதில் இருந்தே சமூக சேவைகளில் எனக்கு ஆர்வம். எங்கேயாவது தப்பு நடந்தால் அதனை தட்டிக்கேட்பேன். சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்னை இப்படி மாற்றிவிட்டன.
இனிமேல் திருந்தி வாழ ஆசைப்படுகிறேன். பழங்குடியின மக்கள் மீது எனக்கு பாசம் அதிகம். இதற்காகத்தான் பழங்குடி மக்கள் கட்சியில் இணைந்துள்ளேன். இனி அவர்களுக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணிக்கப்போகிறேன். அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபடப்போகிறேன் என்கிறார்.
பழங்குடியின மக்கள் கட்சி சார்பில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு குணா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இக்கட்சியின் மாநில தலைவர் விஜயன், திருச்சி குணாவுக்கு அனுப்பியுள்ள நியமன கடிதத்தில் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கும், மக்களுக்கும் தொண்டாற்றிட வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதில் விசேஷம் என்னவென்றால் திருச்சி போலீஸாரின் என்கவுன்டர் லிஸ்ட்டில் குணாவின் பெயரும் உள்ளதாம். இந்த நிலையில் அவர் அரசியலுக்கு வருகிறார்.
புல்லட்டிலிருந்து தப்பி பேலட் பக்கம் வந்துள்ள குணாவின் அரசியல் வாழ்க்கை எப்படி இருக்குமோ, மக்கள் கையில்தான் உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications