விஜயகாந்த் மீது தேர்தல் விதி மீறல் வழக்கு
சிவகங்கை: பிரசாரத்தின்போது தேர்தல் விதி முறையை மீறியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நேற்று சிவகங்கை மாவட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சுற்றுபயணம் செய்த போது, ஏராளமான இடங்களில், அவரை வரவேற்று டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தன.
அத்துடன் மின்கம்பங்களில் கொடி தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன என்றும், விஜயகாந்துடன் 10-க்கும் மேற்பட்ட கார்கள் பின்தொடர்ந்து சென்றன என்றும் புகார் செய்யப்பட்டது.
மேலும், மானாமதுரை புதிய பஸ்நிலையத்தில் விஜயகாந்த் முன்அனுமதியின்றி, போக்குவரத்துக்கு இடையூறாக பிரசாரம் செய்தார் எனவும் கிராம நிர்வாக அதிகாரி பழனிச்சாமி போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறியதாக விஜயகாந்த் உள்பட 100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதே போல் எம்.கரிசல்குளத்தில் அனுமதியின்றி டிஜிட்டல் போர்டு வைத்ததாக தே.மு.தி.கவை சேர்ந்த பூமிநாதன், ஆறுமுகம், அர்ஜுனன் ஆகியோர் மீது திருப்பாச்சேத்தி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் கூடுதல் வாகனத்தில் சென்றதாக ஒரு வழக்கும், டிஜிட்டல் போர்டு வைத்ததாக மற்றொரு வழக்கும் விஜயகாந்த் மற்றும் 50 பேர் மீது திருப்பாச்சேத்தி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளர் மீது வழக்கு
ராமநாதபுரம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சிங்கை ஜின்னாவை ஆதரித்து விஜயகாந்த் நேற்று முன் தினம் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார்.
அப்போது கீழக்கரையில் நீண்ட தூரத்துக்கு வாகனங்களில் தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக சென்றதாக கிராம நிர்வாக அதிகாரி சேக்தாவூது வேட்பாளர் சிங்கை ஜின்னா மீது கீழக்கரை போலீசில் புகார் செய்தார். அதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications