பாஜக: ராமநாதபுரத்தில் திருநாவுக்கரசர் போட்டி
அறந்தாங்கி: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக தேசியச் செயலாளரும், ராஜ்யசபா எம்பியுமான திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார். இதையடுத்து ராமநாதபுரம் பகுதியிலேயே முகாமிட்டு கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் காது குத்து, பெயர் வைத்தல், கல்யாணம், கருமாதி என அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
தமிழக அரசியல் தலைவர்களில் அனைவராலும் விரும்பப்படும் நபர் திருநாவுக்கரசர். நாகரீகமான அரசியல் நடத்தும் அவர் பாஜகவில் இருந்தாலும் அனைத்து மதத்தினரி்ன் அன்பைப் பெற்றவர்.
இந் நிலையில் ஆவுடையார்கோவிலில் பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தைக் கூட்டிய அவர் பேசுகையில்,
ராமநாதபுரம் தொகுதியில் நான் போட்டியிட உள்ளதற்குக் காரணம், நான் முன்பு போட்டியிட்டு வென்ற அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி தற்போது ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டது தான்.
எனவே தாய்வீடாகிய ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறேன்.
கட்சி, ஜாதி வித்தியாசம் இல்லாமல் பொதுமக்கள் எனக்கு வாக்களிப்பார்கள். எம்ஜிஆரால் வளர்க்கப்பட்டவன் நான். எனக்கு மதரீதியாக, ஜாதி ரீதியாக பாகுபாடு காட்டத் தெரியாது. ஆகவே, முஸ்லிம் மக்கள் முதல் அனைத்து மதத்தினரும் என்னை ஆதரிப்பார்கள்.
தேசிய அளவில் பாஜக தற்போது அதிக மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. அடுத்து அத்வானிதான் பிரதமராகப் போகிறார் என்றார் திருநாவுக்கரசர்.
-
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்











Click it and Unblock the Notifications