தென் தமிழகத்தில் தொடரும் மழை-குமரியில் 3 பேர் பலி
நெல்லை: தென் தமிழகத்தில் மழை தொடர்ந்து வலுத்து வருகிறது. குமரியில் மின்சாரம் தாக்கி 2 பேர் இறந்தனர் இதையடுத்து மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை காலை வரை விடிய விடிய பொய்தது. பகலிலும் மழை தூறி கொண்டே இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.
குற்றாலம் மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அருவிகளில் வெள்ள பெருக்கெடுத்துள்ளது.
இதுபோல் பாபநாசம் அகஸ்தியர் அருவி, பணதீர்த்தம் ஆகியவற்றிலும் வெள்ளம் ஏற்பட்டு, பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தென் மாவட்டங்களில் உள்ள அணைகள் வேகமாக நிறைந்து வருகின்றன.
குமரி மாவட்டத்தில் இன்று மூன்றாவது நாளாக மழை கொட்டியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி அதிகபட்சமாக குமரியில் 34.5 மிமீ மழை பதிவாகியுள்ளது.
கடல் சீற்றமாகவே காணப்படுகிறது. உப்பளங்கள், செங்கல் சூளைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் அழகியபாண்டியபுரத்துக்கு அருகில் இருக்கும் அந்தபுரத்தை சேர்ந்த பிரமு மற்றும் அருமனை அம்பலகாலனியை சேர்ந்த ஸ்டான்லி ஆகியோர் மின்சாரம் தாக்கி இறந்தனர்.
ரயில் தாமதம்...
மழை காரணமாக நெல்லை மாவட்டம் தளபதிசமுத்திரத்தில் ரெயில் தண்டவளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் நாகர்கோவில் வரும் ரயில்கள் அனைத்தும் 1 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications