குழந்தையை கொன்று தந்தை தற்கொலை முயற்சி
சென்னை: இறந்த தனது காதல் மனைவியை காண போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மகனை கொலை செய்து பின்னர் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சென்னை என்ஜினியர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை புதுப்பேட்டை சியாலித்தெருவை சேர்ந்தவர் மரிய பிரான்சிஸ் (30). என்ஜினியரிங் முடித்துள்ள இவர் தண்டையார்பேட்டையில் உள்ள செல்போன் நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலைபார்த்து வருகிறார்.
இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் சாந்தா (26) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகன் டோபின்(6). காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரான்சிசும், சாந்தாவும் மகிழ்ச்சிகரமாக வாழ்க்கை நடத்தி கொண்டிருந்த போது, விதி புற்றுநோய் ரூபத்தில் விளையாடியது.
சாந்தா கடந்த ஆண்டு ஜூலை மாதம் புற்று நோய் காரணமாக மரணமடைந்தார். இந்த துயர சம்பவத்தில் இருந்து பிரான்சிஸ் மீண்டும் வரமுடியாமல் தவித்தார். மனைவியை இழந்த இவர் வாழ்க்கையே சூன்யமாகி போனதாக உணர்ந்தார். இந்நிலையில் குழந்தை டோபினும் அம்மா வேண்டும், அம்மாகிட்ட போகலாம் என அடிக்கடி அழுது அடம்பிடித்துள்ளான்.
இதையடுத்து பிரான்சிஸ் கிட்டதட்ட மனநிலை பாதித்தவர்களை போல செயல்பட துவங்கியுள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களாக அவரது வீடு திறக்காமல் கிடந்தது. அவர் ஊருக்கு போயிருக்கலாம் என நினைத்தவர்களுக்கு வீட்டுக்குள் பைப் ஒன்றில் தண்ணீர் கொட்டி கொண்டே இருக்கும் சத்தம் கேட்டுள்ளது.
இதையடுத்து வீட்டின் உரிமையாளர் தன்னிடம் உள்ள மற்றொரு சாவி மூலமாக பைப்பை மூட கதவை திறந்துள்ளார். கதவை திறந்த உரிமையாளர் படுக்கை அறையில் டோபின் உடல், அழுகி பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவனுக்கு அருகில் தரையில் பிரான்சிஸ் நிர்வாண கோலத்தில் மயங்கி கிடந்தார்.
இதையடுத்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. குழந்தை டோபினின் பிணத்தை கைப்பற்றிய போலீசார் அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். உயிருக்கு போராடி கொண்டிருந்த பிரான்சிஸ் சென்னை அப்பலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
குளிர்பானம் அல்லது சாப்பாட்டில் விஷம் கலந்து குழந்தை டோபினை கொன்று விட்டு மரிய பிரான்சிஸ் விஷம் குடித்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். குழந்தையை கொன்றதாக பிரான்சிஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் போலீஸ் காவலுடன் சிகிச்சை பெறுகிறார்.
பிரான்சிஸ் இந்த முடிவை எடுக்கும் முன் இது குறித்து தனது தந்தைக்கும், உள்ளூர் போலீஸ் இன்ஸ்பெக்டரும் உருக்கமான கடிதம் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதில்,
நான் மனைவி மீது எல்லையற்ற பாசம் வைத்திருந்தேன். அவளை நான் ஒரு நாள் கூட பிரிந்து தனியாக இருந்தது கிடையாது. அவளது மரணம் என்னை பைத்தியமாக்கிவிட்டது. டோபினும் அம்மா எங்கே எனக்கேட்டு அழுகிறான். அம்மா இருக்கும் இடத்துக்கு போய்விடலாம் என்கிறான்.
இந்த வேதனையால் தினமும் இரவு என்னால் தூங்க முடிவதில்லை. எனது குழந்தையின் ஆசைப்படி நானும் எனது குழந்தையும், எனது மனைவி இருக்கும் இடத்துக்கு செல்கிறோம் என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications